Saturday, October 18, 2014

கோசாரம் பலன்

கோசாரம் பலன்



(சூரியனின் பலன்களின் கோசாரம்)
-----------------------------------------------------------------------------------------------------------------
1)ஒரு ஜாதகனின் சந்திர லக்கினத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது:
அவனது செல்வங்கள் விரயம் ஆகின்றன, அல்லது அவனுக்கு கௌரவக் குறைவு ஏற்படுகிறது .அத்துடன் அவனுக்கு வயிற்றுவலியாவது மார்பு வலியாவது ஏற்படக்கூடும். அவன் வெளியில் அலைந்து திரியும் படியும் நேரலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2)
சந்திர லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது;
 
ஜாதகனுக்குப் பொருள் நஷ்டம் ஏற்படும்.அவன் வஞ்சகர்களால் ஏமாற்றப்படுவான்.அவனுக்குக் கண்நோய் உண்டாகும்.பொதுவாக.
ஜாதகனுக்குச் சுகம் இராது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3)
சந்திரன் லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது;
 
ஜாதகனுக்கு ஒரு பிதிய பதவி கிடைக்கும்.செல்வம்.
மகிழ்ச்சி. ஆரோக்கியம் ஆகியவை ஏற்படும்.அவனுடைய
பகைவர்கள் கேடு அடைவார்கள்,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
4)
சந்திர லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது;
 
ஜாதகன் நோயுறுவான். அவனுடைய இன்ப அனுபவங்களுக்குத் தடை ஏற்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
5)
சந்திர லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது:
 
ஜாதகனுக்கு நோய்களாலும் பகைவர்களாலும் துன்பங்கள் ஏற்படும். ஆனால் சூரியன் சஞ்சரிக்கும் நட்சத்திரம் சுபமானதாரையாய் இருந்தால் துன்பங்கள் வருவதுபோல் தோன்றுமேயொழிய வரமாட்டா,,
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
6)
சந்திர லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது;
 
ஜாதகனுடைய நோய்கள் விலகும். கவலைகள் நீங்கும். பகைவர்கள்
ஒழிவார்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
7)
சந்திரன் லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது;
 
ஜாதகனுக்கு அலைச்சல் ஏற்படும்.வயிற்று நோய்னால் பயம் ஏற்படும்.அவன் தாழ்நிலையை அடைகிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
8)
சந்திரன் லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது.
 
ஜாதகனுக்கு நோய் உண்டாகும்.வீண் பயங்களும்.மனைவியுடன் சச்சரவுகளும் ஏற்படும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
9)
சந்திர லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது:
 
ஜாதகனுக்கு எதிலும் நிம்மதி இராது.அவனுக்குக் கௌரவம் குன்றும்.நோய் உண்டாகும்.பணத்தினால் பகைமை ஏற்படும்,
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
10)
சந்திரனுக்குப் பத்தாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது;
 
ஜாதகன் தன் பகைவர்கள் அஞ்சும்படியான வெற்றிகளை அடைவான்.அவன் எடுத்த முயற்சிகள் யாவும் கைகூடும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
11)
சந்திரனுக்கு பதினோராம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது;
 
ஜாதகன் தன் வெற்றாயால் தீட்டிய புதிய பதவியை அடைவான். அவனது மதிப்பு உயரும்.செல்வம் பெருகும். நோய் நீங்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
12)
சந்திரனுக்குப் ப்ன்னிரண்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது;
 
ஜாதகனுடைய நல்ல முயற்சிகளில் பல் வெற்றி அடைகின்றன, தீய முயற்சிகள் தோல்வி அடைகின்றன.
_________________________________________________________________________


(கோசார சந்திரனின் பலன்கள்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
1)
ஒரு ஜாதகனின் சந்திர லக்கினத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
 
ஜாதகனுக்கு நல்ல உணவு கிடைக்கும். அவனுக்குச் சமமான படுக்கை உண்டாகும் புத்தாடைகள் கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
2)
 
சந்திரன் லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
 
ஜாதகனுக்குப் பொருள் விரயம் அல்லது மதிப்பு குறைவு ஏற்படும்.அவன் எதுத்த காரியங்கள் தடைப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3)
 
சந்திர லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
 
ஜாதகனுக்குப் பண வசதி உண்டாகும்.புதிய ஆடைகள் கிடைக்கும் அவனுடைய முயற்சிகளில் வெற்றிகிட்டும். அவனுக்கு இன்ப அனுபங்கள் ஏற்படும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
4)
 
சந்திர லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
 
ஜாதகனுக்கு எதிலும் துணிவு ஏற்படமாட்டாது. அவன் யாரையும் நம்பமுடியாமல்
 
தவிப்பான்;
-------------------------------------------------------------------------------
5)
 
சந்திர லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது:
 
ஜாதகனுக்குத் தாழ்வு நிலை ஏற்படும் அவனுக்கு நோயும் கவலையும் உண்டாகும். அவன் போக விரும்பும் இடங்களுக்குப் போக முடியாமல் இடையூறு ஏற்படும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
6)
 
சந்திர லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது:
 
ஜாதகக்குப் பணவருவாய் ஏற்படும்.சுகவாழ்வு உண்டாகும். நோய்கள் மறையும். பகைவர்களும் விலகிச் செல்வார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
7)
 
சந்திர லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு. வாகன வசதிகள் பெருகும். கௌரவம் உண்டாகும்.நல்ல உணவுகள் கிடைக்கும்.பண வரவு ஏற்படும்.
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
8)
 
சந்திர லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு திடீர் என்று எதிர்பாராத அச்சம் ஏற்படும். பசிக்கு உணவு தானாகவே கிடைக்கும்.நோய்கள் உண்டாகும்.
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
9)
 
சந்திர லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு ஏதாவது ஒரு வகையில் கட்டுப்பாடு உண்டாகும். மனத்திற்கு அச்சம் தோன்றும். உடல் உழைப்பை ஏற்படுத்தும்.வயிற்று வலியும் ஏற்படலாம்.
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
10)
 
சந்திர லக்கினத்துக்குப் பத்தாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு மற்றவர்கள் கீழ்ப்படிந்து நடப்பார்கள். முயற்சிகள் கைகூடும்.
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
11)
 
சந்திர லக்கினத்துக்குப் பதினோராம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
 
ஜாதகனுக்குப் பொருள் வரவும். அதனால் மனமகிழ்ச்சியும்.நண்பர்களது சந்திப்பும் உண்டாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
12)
 
சந்திர லக்கினத்திக்குப் பன்னிரண்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது;
 
ஜாதகனுக்குப் பண விரயம் ஏற்படும்.அவனுடைய கர்வத்தினாலேயே அவனுக்குக் கெடுதல் உண்டாகும்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


(கோசார செவ்வாயின் பலனகள்)
1) ஒரு ஜாதகனின் சந்தர லக்கினத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு எல்லா வகைகளிலும் தொல்லைகள் உண்டாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2) சந்திர லக்கினத்தில் இரண்டாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் எவ்வளவுதான் ஆற்றலும் செல்வாக்கும் படைத்தவனாய் இருந்தாலும்.அவனுக்கு அரசாங்கத்தின் மூலமும் பகைவர்கள் மூலமும் கெடுதல்கள் ஏற்படும். சண்டை சச்சரவுகள். பித்தநோய்கள்.திருடர்கள்.நெருப்பு இவற்றால் தீங்குகள் தோன்றும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3) சந்திர லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குத் திருடர்களாலும் சிறுவர்களாலும் நன்மை
உண்டாகும்.அவனது செல்வம் பெருகும்.உடல் நிலை சீர்படும். மற்றவர்களை அடக்கி ஆளக்கூடிய அதிகாரமும் நிலபுலன்களின் சேர்க்கையும் ஏற்படும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
4) சந்திர லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குக் காய்ச்சலோ வயிற்று வலியோ ஏற்படுகிறது.
அவன் விரும்பாமலே அவனுக்குத் தீயவர்களுடைய தொடர்பும்,அதனால் தீமைகளும் உண்டாகும்.அவனுக்கு எதிலும் குறைவை உண்டாக்கும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
-------------------------------------------------------------------------------
5) சந்திர லக்கினத்திக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய பிள்ளைகளாலேயே அவனுக்குத் தொல்லைகள் உண்டாகும். பகைவர்களால் இடைஞ்சல் ஏற்படும். கோபமும் பயமும் அடிக்கடி தோன்றும். நோய்களால் உடல் அழகு குன்றும்.
-------------------------------------------------------------------------------
6) சந்திர லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு இருந்த பயங்களும் பகைமைகளும் விலகிவிடும்.சண்டைகள் சமாதானம் ஆகிவிடும். ஏராளமான செல்வம் உண்டாகும்.ஜாதகன் எவருடைய தயவையும் எதிர்பாராதவனாய் இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
7) சந்திர லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு அவனுடைய மனைவியோடு சண்டை ஏற்படும். கண் நோயும் வயிற்று வலியும் உண்டாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
8) சந்திர லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு இரத்தப் போக்கு ஏற்படும். அவனுடைய பணத்துக்கும் கௌரவத்துக்கும் பழுது உண்டாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
9) சந்திர லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு உடல் வலிமை குன்றும். பொருள் விரயமும் அலைச்சலும் அவமானமும் ஏற்படும். அவன் நடமாடுவதற்கும்கூட வலுவில்லாதவனாய்த் திரிவான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
10) சந்திர லக்கினத்துக்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குப் பெரிய நன்மையோ தீமையோ ஏற்படமாட்டாது எனினும் பாதி காலம் (முற்பகுதி அதாவது) சிறிது தொல்லைகளும். பாதி காலம் (அதாவது பிற்பகுதி) சிறிது நன்மைகளும் ஏற்படும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
11) சந்திர லக்கினத்துக்குப் பதினோராம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குத் தொட்டது எல்லாம் வெற்றியாகவே முடியும். ஏராளமான பொருள் வரவு ஏற்படும். அவன் தன்னைச் சூழ்ந்து உள்ள எல்லாரையும் காட்டிலும் மிக மேலான நிலையில் இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
12) சந்திர லக்கினத்துக்குப் பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குச் சொல்லமுடியாத தொல்லைகள் ஏற்படும்.பல வழிகளில் வீண் செலவுகள் நெரும். கண் வலியியினாலும்.பித்தநோயினாலும்.பெண்களுடைய கோபத்தினாலும் ஜாதகன் துன்பத்தை அடைவான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

(கோசார சௌமியன் பலன்கள்)
 

 1) ஒரு ஜாதகனின் சோமன் லக்கினத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு பல்வேறு வகைகளில் பொருள் விரயம் ஏற்படும்.அபவாதங்களும். பகைமைகளும், அச்சங்களும் உண்டாகும்.அவன் கட்டுப்பாடுகளுக்கு உட்பட நேரிடும் அவன் தன் வீட்டில் தங்குவதே அரிதாய் இருக்கும்,
 

2) சோமன் லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு மனக்குறையும் பணமுடையும் உண்டாகும்.
 

3) சோமன் லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குப் புதிய நண்பர்கள் உண்டாவார்கள். அவனுடைய தீய செயல்களின் விளைவுகள் அவனை ஓயாது பயமுறுத்திக் கொண்டு இருக்கும்.
 

4) சோமன் லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு நல்ல பண வரவு ஏற்படும்,அவனுடைய குடும்பம் செழிப்பு அடையும், உறவினர்களின் நெருக்கமான தொடர்பு உண்டாகும்.
 

5) சோமன் லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு அவனுடைய மனைவி மக்களுடன் பகைமை உண்டாகும்.
அவனுடைய கைக்கு எட்டிய தூரத்தில் இன்பங்கள் இருந்தாலும்.அவனால் அவற்றை அனுபவிக்க முடியாது.
 

6) சோமன் லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு எல்லா மக்களிடையேயும் செல்வாக்குப் பெருகும். அவன் எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.அவன் மேன்மை அடைவான்.
 

7)சோமன் லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்குக்போது;
ஜாதகன் சண்டை சச்சரவுகளால்.துன்பம் அடைவான். அவனது உடல் நலத்துக்குக்
குறைவு உண்டாகும். அவனுக்கு வீணான பேராசைகளும் இடையூறுகளும் ஏற்படும்.
 

8) சோமன் லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் தான் நினைத்த காரியங்களை முடிப்பான்.அவனுக்கு புத்திர லாபம். தனலாபம் முதலியவை ஏற்படும். புத்தாடைகளும் கிடைக்கும்.அவன் மகிழ்ச்சி உடையவனாய் விளங்குவான்,கல்வியில் நுடபமான அறிவும் புகழும் உண்டாகும்.
அவன் பல பேர்களுக்கு உதவி செய்பவனாய் இருப்பான்,
 

9) சோமன் லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு எதிலும் இடையூறுகளே ஏற்பட்டுக்கொண்டு இருக்கும், வீண் பழியும். பகைமையும்; அலைச்சலும் ஏற்படும்.
 

10) சோமன் லக்கினத்துக்குப் பத்தாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய பகைவர்கள் ஒழிவார்கள்.அவன் நிரம்பப் பணம் சம்பாதிப்பான், இன்ப சுகங்களை அடைவான், மனமகிழ்ச்சியோடு வேடிக்கை விளையாட்டுகளில் பொழுதுபோக்குவான்;
 

11) சோமன் லக்கினத்துக்குப் பதினோராம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்கு அவனுதைய பிள்ளைகளாலும், இளமங்கையர்களாலும் லாபம் உண்டாகும், அவன் மிகவும் சுகமாக வாழ்வான், நிறையப் பணம் சம்பாதிப்பான். நண்பர்களின் உறவால் மகிழ்ச்சி அடைவான்.
 

12) சோமன் லக்கினத்துக்குப் பன்னிரண்டாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்குப் பகைவர்களாலும் நோய்களாலும் துன்பங்கள் ஏற்படும்.
____________________________________________________________________

(கோசார குருவின் பலன்கள்)
 

1) ஒரு ஜாதகனின் சோமன் லக்கினத்தில் குரு சஞ்சரிக்கும்போது:
ஜாதகன் தன் மனைவி மக்களை விட்டு விலகியிருக்க நேரலாம், அவனுக்கு வரவேண்டிய பொருளும் கைக்கு வராது, அவன் தன்னுடைய பதவியை இழக்கும்படி ஆகலாம்.
 

2) சோமன் லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு ஏராளமான செல்வப் பெருக்கு உண்டாகும், அவனுக்குப் பகைவர்களே இருக்கமாட்டார்கள்,அவன் தன் மனைவியோடு மிகவும் இன்பமாக
வாழ்ந்து கொண்டு இருப்பான்.
 

3) சோமன் லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுடைய உத்தியோகத்துக்கே ஆபத்து வரலாம், அவன் தன் வீடுவாசல்களை இழந்து ஊரைவிட்டே வெளியேற நேரலாம்,அவனுடைய கௌரவம் குன்றும்.அவன் எடுத்தகாரியங்களில் எல்லாம் இடையூறு நேரும். அவன் உள்ளம் மிகவும் வேதனைப்படும்
 

4) சோமன் லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய உறவினர்களும் நண்பர்களுமே, அவனுக்குப் பகைவர்களாக மாறுவார்கள் அவர்களாலும் மற்றவர்களாலும் ஏற்படும் துன்பங்களால் அவன் வீட்டில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் சுகத்தை அடைய மாட்டான் 


5) சோமன் லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்கோ அவனது குடும்பத்தில் வேறு யாருக்காவதோ திருமணம் முதலிய சுப காரியங்கள் நடைபெறும், அவனுக்கு குழந்தை பிறக்கும், புதிய வாகன வசதிகள் ஏற்படும்.அவனுக்கு கீழே பலர் வேலை செய்வார்கள்.
அத்துடன் அவன் புதிய வீடுகளைக் கட்டுவான், ஆடை ஆபரணங்களை அடைவான்,கல்வியில் தேர்ச்சி பெறுவான், உள்ளத்தில் ஊக்கம் உடையவனாய் இருப்பான் ஏராளமான செல்வங்களைச் சம்பாதித்து இன்பமாக வாழ்வான்,
 

6) சோமன் லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு அவன் மனைவி கூட எதிரியாக இருப்பாள்: எவ்வளவு இன்பமான சூழ்நிலையும் அவனுக்குத் துன்பமாகவே இருக்கும்.
 

7) சோமன் லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுடைய வாழ்க்கையில் எல்லா இன்பங்களும் பெருகுகின்றன அவனுடைய அறிவில் தெளிவும், பேச்சில் இனிமையும் ஏற்படுகின்றன, அவனுக்கு ஏராளமான செல்வப் பெருக்கும் உண்டாகிறது.
சோமன் லக்கினமும் ஜென்ம லக்கினமும் சில ஜாதகர்களுக்கு ஒரே இராசியாக இருக்கும்,அந்த இராசியானது கடகமாகவோ கன்னியாகவோ இருக்குமாயின், அதற்கு ஏழாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது, மேற்கூறிய சுபபலனகள் நடைபெறமாட்டார்?
 

8) சோமன் லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது:
ஜாதகன் ஏதாவது ஒரு வகையில் கட்டுப்பட நேரும் அவனுக்கு நோயும் கவலைகளும் ஏற்படும்,பிரயாணங்களினால் துன்பமும்,உயிருக்கே ஆபத்து உண்டாவது போன்ற சூழ்நிலைகளும், எடுத்த காரியங்களில் எல்லாம் இடையூறுகளும் உருவாகும
 

9) சோமன் லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குப் புதுமையான ஆற்றல்களும் அதிகாரங்களும் ஏற்படுகின்றன,
மகப்பேறு உண்டாகிறது,எடுத்த காரியங்கள் அனைத்தும் அவன் விருப்பம்போல்,
முடிகின்றன,நிலபுலன்களின் சேர்க்கை ஏற்படுகிறது திருமணமோ அல்லது அதைப் போன்ற இன்ப உறவுகளோ கைகூடுகின்றன.
 

10) சோமனுக்குப் பத்தாம் இடத்தில் குரு சஞ்சருக்கும்போது:
ஜாதகனுடைய பதவி பறிபோகும்,உடல் நலம் கெடும்,கைப் பொருளும் விரயமாகிவிடும்,
 

11) சோமனுக்குப் பதினோராம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு முன்பு பறிபோன பதவி திரும்பக் கிடைககும்,உடல் நலம் ஏற்படும்,இழந்துபோன பொருள்களும் கைகூடும்,
 

12) சோமனுக்குப் பன்னிரண்டாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் வழி தவறிச் செல்வதால் ஏற்படும் துன்பங்களுக்கு ஆளாவான்,
________________________________________________________________________________________________ 


 (கோசார பிருகு பலன்கள்)
 
1) ஒரு ஜாதகனின் சோமன் லக்கினத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குச் சிறப்பான இன்ப அனுபவங்களும் ஏராளமாக உண்டாகும்,அத்துடன் அவனுக்குப் புதிய பதவிகள்,வாகன வசதிகள்,மகப்பேறு, கல்விப்பேறு ஆகியவையும் ஏற்படும்,


2) சோமன் லக்கினத்திக்கு இரண்டாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு நிறைய பண வரவு உண்டாகும்,அவனுக்குச் செல்வர்களின் நட்பு ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பும்,மகப்பேறு நிகழலாம், ஜாதகன் தன் மனம் கொண்ட மட்டும் இன்பங்களை அனுபவிப்பான்,


3) சோமன் லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குப் புதிய பதவிகளும் அதிகாரங்களும் ஏற்படும், அவனது செல்வமும் கௌரவமும் பெருகும் அவனுடைய பகைவர்களுக்குக் கேடு உண்டாகும்,
 

4) சோமன் லக்கினத்துக்கு நாலாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனைப் பிரிந்து இருந்த நண்பர்கள் மறுபடியும் வந்து சேருவார்கள், அவனுக்கு அளவற்ற ஆற்றல்கள் ஏற்படும்.
 

5) சோமன் லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்கு மிகுதியான மகிழ்ச்சிகள் ஏற்படும்.மேலோர்களின் ஆசி உண்டாகும்.
உறவினர்களும் நண்பர்களும் அவனுக்கு நன்மையான காரியங்களைச் செய்வார்கள், மகப்பேறு உண்டாகலாம்.பொருட்பேறு கட்டாயம் உண்டாகும் அவனுக்குப் பகைவர்களே இருக்கமாட்டார்கள்.
 

சோமன் லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு அவமானங்கள்.நோய்கள்.துன்பங்கள் ஆகியவை ஏற்படும்.
 

சோமன் லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்கு பெண்களால் கெடுதியோ ஆபத்தோ உண்டாகும்.
 

சோமன் லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்குப் புதிய வீடுகளும் வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.இன்ப உறவுகளும் ஏற்படும்.
 

சோமன் ஒன்பதாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு ஏராளமான பொருளின் வரவு ஏற்படும்.இவன் பல தான தருமங்களைச் செய்துகொண்டு மனைவி மக்களுடன் இன்பவாழ்வு வாழ்வான்
 

சோமன் பத்தாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் சண்டை வம்புகளுக்கும் அவமானத்துக்கும் ஆளாவான்,
 

சோமன் பதினோராம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்கு நண்பர்கள் பெருகுவார்கள் அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்
 

சோமன் பன்னிரண்டாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் இன்ப வாழ்வு வாழ்வான்.ஆனால் அவனுடைய சில உடைமைகளுக்குக் கேடு உண்டாகும்.
_______________________________________________________________________________________________

(கோசார சனியின் பலன்கள்)
 

 1) ஒரு ஜாதகனின் சோமன் லக்கினத்துல் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு விஷத்தினாலோ, நெருப்பினாலோ ஆபத்துக்கள் ஏற்படும். அவனுக்கு நெருக்கமான உறவினர்களது பிரிவு ஏற்படும். உறவினர்களுக்கும் அவனால் கேடு
ஏற்படும் அவனது நண்பர்களும் பகைவர்கள் ஆவார்கள். அவன் தன் வீடு வாசல்களை இழப்பான், சொந்த ஊரை விட்டும் வெளியேறிவிடுவான். அவனுடைய பணம் கெட்ட வழிகளில் செலவு ஆகும், அவனுடைய புத்தியும் கெட்ட வழிகளில் செல்லும், அவன் எப்போதுமே வாடியமுகத்தோடு காணப்படுவான்,
 

2) சோமன் லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய உடல் நலம் சீர்கெடும், அவன்து தோற்றத்தில் இருந்த பொலிவு போய்விடும், அவனது கர்வமும் ஆற்றலும் குலைந்துவிடும்.அவனது கர்வமும் ஆற்றலும் குலைந்துவிடும். தன்னால் நேர்மையான வழிகளில் சம்பாதிக்கப்பட்ட பொருள்களைக்கூட அவன் இழந்து விடுவான்
 

3) சோனன் லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் ஏராளமான பணம் சம்பாதிப்பான். அவன் மண்ணைத் தொட்டாலும் பொன் ஆகும். அவனுடைய நோய்கள் விலகிவிடும். எவரைக் கண்டும் அஞ்சாத ஊக்கம் பிறக்கும். வெல்லமுடியாத பகைவர்களையும் அவன் எளிதில் வென்றுவிடுவான். பிதிதான வீடுகளும் பதவிகளும் அவனுக்கு ஏற்படும்.
 

4) சோமன் லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் மாந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் தன் குடும்பத்தை விட்டே விலகியிருக்க நேரலாம். நண்பர்களை விட்டுப் பிரிந்து இருக்க நேரலாம். அவனுடைய பொருள் விரயம் ஆகும், அவனுடைய அறிவு தீய வழிகளிலேயே சென்றுகொண்டு இருக்கும் அதனால் அவன் பல கேடுகளுக்கு ஆளாவான்,
 

5) சோமன் ஐந்தாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும், அவன் அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவான், அதனால் அவனுடைய பொருளுக்கு கேடு உண்டாகும்,
 

6) சோமன் ஆறாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய நோய் நொடிகள் எல்லாம் அறவே ஒழிந்துவிடும். அவனுடைய கொடிய பகைவர்களுங்கூட அவனுக்கு வசப்பட்டுவிடுவார்கள். அல்லது அழிந்து விடுவார்கள். அவன் ஆசைப்படுகிற இன்பங்கள் எல்லாம் கைகூடும். அத்துடன்
ஏராளமான பொருள் வசதிகளும் ஏற்படும்.
 

7) சோமன் லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் ஊர் ஊராய்த் திரிந்து அலைவான், அவன் தேவயில்லாத உழைப்புக்கும் தொல்லைக்கும் ஆளாவான். மனைவி மக்களால் வெறுக்கப்படுவான். அல்லது அவர்களிடமிருந்து பிரிக்கப்படுவான்.
 

8) சோமன் லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு ஏற்படக்கூடாத நஷ்டங்கள் ஏற்படும். வரக்கூடாத துன்பங்கள் வரும். அவனைக் கவலைகளும் நோய்களும் பிடுங்கித் தின்னும். அவன் பட்டினி கிடக்கவும் நேரிடலாம். அவனுக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களும்கூட அவனை மதிக்க மாட்டார்கள்.அவனை எவரும் நம்பமாட்டார்கள்.
 

9) சோமன் லக்கினத்துக்கு ஓன்பதாம் இடத்தில் மந்தன் சஞ்சாரிக்கும்போது;
ஜாதகனுக்கு நோய் ஏற்படும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். பொருள்கள் கையைவிட்டுப் போகும். வறுமை உண்டாகும். பகைமை வளரும் மன அமைதி போய்விடும்.
 

10) சோமன் லக்கினத்துக்குப் பத்தாம் இடத்தில் மந்தன் சஞ்சாரிக்கும்போது;
ஜாதகனுக்கு ஒரு புதிய உத்தியோகமோ தொழிலோ ஏற்படும். ஆனால் பொருளும் விரயம் ஆகும். அறிவின் கூர்மை மழுங்கும். கெட்ட பெயர் உண்டாகும்.
 

11) சோமன் லக்கினத்துக்குப் பதினோராம் இடத்தில் மந்தன் சஞ்சாரிக்கும்போது;
ஜாதகனுடைய கோபத்துக்கு எல்லோரும் பயப்படுவார்கள். பிறரைச் சேரவேண்டிய இன்பங்களும் செல்வங்களும் இவனை வந்து சேரும். வேறொருவனை மணக்க வேண்டிய பெண் இவனை மணப்பாள்; ஜாதகனுடைய புகழ் பெருகும். அவன் நினைத்த காரியம் நடக்கும். அவன்து நிலை உயரும்,
 

12) சோமனுக்குப் பன்னிரண்டாம் இடத்தில் மந்தன் சஞ்சாரிக்கும்போது;
ஜாதகனுக்குப் பிரச்சினைகளும் கவலைகளும் ஓன்றன் பின் ஒன்றாய் வந்து கொண்டிருக்கும்,
______________________________

No comments:

Post a Comment