Friday, October 17, 2014

யோகங்கள் பகுதி 2

யோகங்கள் பகுதி 2


யோகங்கள் பகுதி 1ன் தொடர்ச்சி ...




யோகங்கள் என்ற வார்த்தை ஒரு கிரகத்திற்கும் இன்னொருகிரகத்திற்கும் தொடர்பை குறிக்கும். 
குறிப்பு: ஜாதகங்களிலே நல்ல யோகங்கள் இருப்பது மட்டும் போதாது. அக்கிரகங்களின் தசைகள் வயது காலத்தில் வந்தால்தான் யோகங்களுக்கும் பலன் உண்டு மற்றும் யோகக்கிரகங்கள் துர்ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல இடங்களில் அமர வேண்டும். அசுபக்கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ உண்டானால் யோகபங்கமாகும்.

34) அதி யோகம்
சந்திரனுக்கு 6,7,8 ல் சுப கிரகங்களான புதன்சுக்கிரன்குரு இருப்பதால் அதி யோகம் உண்டாகிறது.\
பலன்
நாணயம் மிக்கவர்நேர்மையானவர். சுகயோகங்களை அனுபவிப்பவர். அறிஞ்சர்களால் பாராட்டதக்கவர்.

35) ஜெய யோகம்
ம் அதிபதி நீசம் பெற்று 10 ம் அதிபதி உச்சம் பெறின் ஜெய யோகம் உண்டாகும்.
பலன்
பகைவரை வெல்லக் கூடியவர். போட்டி பந்தயங்களில் புகழ் பெறுவார். நீண்ட ஆயுள் உடையவர். நீதிமன்றங்களில் வாத திறமையால் வெற்றி பெறுவார்.

36) பந்தன யோகம்
லக்னாதிபதியும் 6ம் அதிபதியும் ஒன்று கூடி 1,5,7,9,10 ல் சனியோடு இருபது பந்தன யோகம் ஆகும்.
பலன்
சிறைவாசம் அனுபவிப்பார். பிறர் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வார். அல்லது ஒரே இடத்தில கட்டுப்பட்டு அடங்கி கிடப்பார்.

37) மாதுரு நாச யோகம்
சந்திரன் இரண்டு பாவ கிரகங்களுடன் மத்தியில் இருபினும் பாவகிரகங்களுடன் கூடி இருபினும் மாதுரு நாசம் யோகம் உண்டாகிறது.
பலன்
தாயாருக்கு ஆயுள் குறைவு உண்டாகும்.

38) நள யோகம்
ராகு கேது நீங்கலாக மற்ற கிரகங்களும் உபய ராசியான மிதுனம்,கன்னிதனுசுமீனம் ஆகிய நான்கு ராசிகளில் சஞ்சரிப்பது நள யோகமாகும்.
பலன்
இந்த யோகம் உடையவர் அகோர வடிவமானவராகவும்தீயவராகவும்,ஒதுக்க்பட்டவரகவும்நிலையான் இடத்தில வாழ வகையர்ரவராகவும் இருப்பார்.

39) முசல யோகம்
ராகு கேது நீங்கலாக கிரகங்களும் ரிஷபம்சிம்மம்விருச்சிகம்,கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் சஞ்சரிக்க முசல யோகம் உண்டாகிறது.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் சகலகலா வல்லவர்களாக இருகின்றனர். செல்வம் செல்வாக்கால் செழிப்பு பெறுகின்றனர். தனமான் உணர்வு மிக்கவர். கல்வி ஞானத்தால் புகழ் பெறுபவர்.

40) வல்லகி யோகம்
ராகுகேது நீங்கலாக மற்ற கிரகங்களும் ஏதாவது ராசியில் மட்டும் சஞ்சரிப்பது வல்லகி யோகம்.
பலன்
சுக போகத்தை அனுபவிக்கின்றனர்சங்கீத தொழில் மூலம் பெருமை அடைவர். நாடக தொழில் மூலம் நன்மை பெறுகின்றனர்.

41) ரஜ்ஜு யோகம்
ராகுகேது நீங்கலாக மற்ற கிரகங்களும் மேஷம்கடகம்துலாம்,மகரம் ஆகிய ராசிகளில் மட்டுமே சஞ்சரிப்பது ரஜ்ஜு யோகம் ஆகும்.
பலன்
பேரரசை மிக்கவர். பொருள் ஈட்டுவதில் வல்லவர். வெளிநாடு சென்று பொருள் ஈட்டுவர்.

42) பாச யோகம்
ராகுகேது நீங்கலாக மற்ற கிரகங்களும் ஏதாவது ராசியில் சஞ்சரித்தால் பாச யோகம் ஆகும்.
பலன்
நீதி நெறியை மதிபவராகவும்நேர்மையான தொழிலில் ஈடுபட்டு ஜீவனம் நத்துபாவராகவும் இருப்பார். செல்வம் செல்வாக்கு உடையவர். செல்வம் சேர்ப்பதில் குறியாக இருப்பார்.

43) தாமினி யோகம்
ராகுகேது நீங்கலாக மற்ற கிரகங்களும் ஏதாவது ராசியில் சஞ்சரித்தால் தாமினி யோகம் உண்டாகிறது.
பலன்
அறிவு ஆற்றல் மிக்கவர். பகைவர்களை தன் வயப் படுத்துபவர். நற்பண்பு உடையவர். தான தர்மம் செய்பவர். ஜீவராசியின் பால் கருணை உடையவர்.

44) கேதார யோகம்
ராகுகேது நீங்கலாக மற்ற கிரகங்களும் ஏதாவது ராசியில் சஞ்சரித்தால் கேதார யோகம் ஆகும்.
பலன்
நாற்கால் ஜீவனத்தாலும்விவசாயத்தாலும்நன்மை பெறுவார். வாகனம்பூமி சம்மந்தப்பட்ட வகையிலும் ஜீவனம் நடத்துவார்.

45) சூல யோகம்
ராகுகேது நீங்கலாக மற்ற கிரகங்களும் ஏதாவது ராசியில் சஞ்சரித்தால் சூல யோகம் ஆகும்.
பலன்
வெட்டுகுத்து என்று அராஜகத்தில் அல்லல் படுவார்.விபத்து போன்றவ்றால் துன்பப்ப்படுவார்.

46) யுக யோகம்
ராகுகேது நீங்கலாக மற்ற கிரகங்களும் ஏதாவது ராசியில் சஞ்சரித்தால் யுக யோகம் ஆகும்.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் சமுதாய நெறிகளை எதிர்ப்பவர். நல்லோரை வெறுப்பர்.சிறுமை பெற்று சீரழிவார்.

47) கோல யோகம்.
ராகுகேது நீங்கலாக மற்ற கிரகங்களும் ஏதாவது ராசியில் சஞ்சரித்தால் கோல யோகம் ஆகும்.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் தீயவன் என்று தூற்றபடுவர்,சமுதாயத்தில் ஒதுக்கப்படுபவராகவும்ஏழ்மையாலும்இன்னல்களாலும் இழிவடைவார்.
  
48) சதுரஸ்ர யோகம்
எல்ல கிரகங்களும் 1,4,7,10 ஆகிய இடங்களில் அமைந்தால் சதுரஸ்ர யோகம் உண்டாகிறது.
பலன்
ஆட்சி செய்ய கூடிய அற்புத அமைப்பு ஆகும். நல்ல பெரும் புகழும் பெறுவார்.

49) குரு சந்திர யோகம்
சந்திரனுக்கு 1,5,9 ல் குரு இருக்ககுரு சந்திர யோகம் உண்டாகிறது.
பலன்
உயர்த கல்வியாளர்களாக திகழ்கிறார்கள்.ஆனால் கல்விக்கு தொடர்பில்லாத தொழில் அமைகிறது.

 50) அகண்ட சாம்ராஜ்ய யோகம்
ஜாதகத்தில் 2,5 க்கு அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் பலமுடன் காணப்படின் அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகின்றது.
பலன்
ஒரு நாட்டின் தலைவராகவோ அல்லது பலரும் போற்றும் தலைவனாகவோ உண்டாகும் யோகம் ஏற்படுகின்றது.

 51) பரிவர்தனா யோகம்
இரண்டு கிரகங்களோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்களோ தங்கள் வீட்டில் இருந்து மற்ற கிரகத்தின் வீட்டிலோ மற்ற கிரகம் தன் வீட்டிலோ இடம் மாறி அமர்ந்திருக்க பரிவர்தனா யோகம் உண்டாகின்றது.
பலன்
பரிவர்தனா பெற்ற கிரகத்தின் தசை அல்லது புத்தியில் ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தை பெறுகிறார். செல்வாக்கு புகழ் அனைத்தும் உண்டாகின்றது.
 52) தேனு யோகம்
ஜாதகத்தில் ஆம் அதிபதி சுபர் சேர்கை அல்லது சுபர் பார்வை பெறின் தேனு யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும்,உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.

53) புஷ்கல யோகம்
லக்னாதிபதி 11 ல்அமர்ந்து சந்திரனுக்கு சுபர் பார்வை அமையப் பெற்றால் புஷ்கல யோகம் உண்டாகிறது.
பலன்
மற்றவர்களிடம் அன்புடன் பழகுவார்கள்மற்றவர்களால் மதிக்கப் பெற்று நிலைத்த புகழ் பெறுகிறார்கள்.

முக்தி யோகம்
லக்னத்தில் 12 ல் கேது அமையப் பெற்றவர்கள் முக்தி யோகம் பெறுகிறார்கள்.
பலன்
இறந்த பிறகு மீண்டும் பிறவி ஏற்படுவதில்லை. இருக்கும் காலத்தில் சந்நியாசி வாழ்கையில் நாட்டம் ஏற்படுகின்றது. பக்தி மார்கத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக உள்ளனர்.

54) ஸ்ரீநாத யோகம்
லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன்புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின் ஸ்ரீநாத யோகம் உண்டாகிறது.
பலன்
செல்வம் செல்வாக்கு புகழ்அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர். சிலர் சந்நியாசி போன்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.

55) சக்ரவர்த்தி யோகம்
ஜாதகத்தில் குருசுக்ரன்புதன் ஆட்சி உச்சம் பெற்று காணப்படின் சக்ரவார்த்தி யோகம் உண்டாகிறது.
பலன்
மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார்கள். நாட்டை ஆளும் யோகம் உண்டாகிறது.

56) கனக யோகம்
லக்னம் சரமாக அமையப் பெற்று 5,10 க்கு உடையவர்கள் பலமாக கேந்திரத்தில் 4,7,10 ல் அமையப்பெறின் கனக யோகம் உண்டாகிறது.
பலன்
இந்த யோகம் உடையவர் நிலைத்த புகழ்செல்வம்செல்வாக்கு அமையப் பெறுகிறார்கள்.

57) ரவி யோகம்
சூரியனுக்கு புறமும் சுப கிரகங்கள் அமையப் பெறின் ரவி யோகம் உண்டாகிறது.
பலன்
இந்த யோகம் உடையவர்கள் புகழ்பெருமைநல்ல பதவி அமையப் பெறுகிறார்கள். சாதனைகள் படைக்கிறார்கள்.

58) விரின்சி யோகம்
லக்னாதிபதிசனிகுரு ஆகியோர் பலமுடன் அமையப் பெறின் விரின்சி யோகம் உண்டாகிறது.
பலன்
வல்லமைவலிமைநீண்ட புகழ் யாவும் உடையவராக விளங்குகின்றனர்.
 59) சரஸ்வதி யோகம்
குருசுக்ரன்புதன் லக்னத்திற்கு கேந்திரத்தில் (4,7,10) ல் அல்லது திரிகோணத்திலோ (1,5,9) இருப்பின் சரஸ்வதி யோகம் உண்டாகிறது.
பலன்
மற்றவர்களால் மதிக்கத்தக்க பலன் உண்டாகும். கூர்மையான அறிவு,எழுத்தாற்றல்பேச்சாற்றல் முதலியன உண்டாகும். அமைச்சர்கள் போன்று உயர்ந்த பதவிகளை அடைவார்.

60) சங்க யோகம்
5,6 க்கு அதிபதி இனைந்து ஒரே வீட்டில் இருபினும் அல்லது ஒருவருக்கொருவர் ஆம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது.
பலன்
உயர் கல்விநீண்ட ஆயுள்நிலையான புகழ்மக்கள் மத்தியில் சாதனை செய்பவராகவும் உள்ளார்.

61) ராஜ யோகம்
ஆம் அதிபதி குரு பார்வை பெற்று ஆட்சி பெறின் ராஜ யோகம் உண்டாகிறது.
பலன்
வீடுவாகனம்செல்வம்செல்வாக்குயாவும் குறைவில்லாமல் அமைகிறது.

62) பூமி பாக்கிய யோகம்
4,9 அதிபதிகள் 3,6,8,12 ல் அமரக்கூடாது. நீசம் பெறக்கூடாது. பாபர் சேர்கை பெறக்கூடாது. 4,9 அதிபதிகள் குரு பார்வை பெற்று ஆட்சி பெறின் இத்தகைய அமைப்பு உண்டாயின் பூமி பாக்கிய யோகம் உண்டாகும்.
பலன்
வீடுநிலம் சேர்கை உண்டாகும்சொத்தும் நிலைத்து நிற்கும்.

63) லட்சுமி யோகம்
ஆம் அதிபதி ல் ஆட்சி பெற்று இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது.
பலன்
யோகம் தரக்கூடிய கிரகத்தின் தசையில் லட்சுமி கடாட்சம் உண்டாகிறது. அபரிமிதமான செல்வம் அடைகின்றனர்.

64) வரிஷ்ட யோகம்
ஜாதகத்தில் சூரியனுக்கு 3,6,9,12 சந்திரன் அமையபெரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல அறிவுஒழுக்கம்தைரியம்செல்வம்செல்வாக்கு போன்ற அற்புத பலன்கள் உண்டாகின்றது.

65) தரித்திர யோகம்
ம் அதிபதி (பாக்யாதிபதி) 12 ல் மறைவு பெற்றால் தரித்திர யோகம் உண்டாகிறது.
பலன்
வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுகின்றனர். எப்போதாவது செல்வம் வந்தாலும் அதுவும் விரயமாகின்றது.

66) கலாநிதி யோகம்
குரு அல்லது ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெறின் கலாநிதி யோகம் அமைகிறது.
குருபுதன்சுக்கிரன் 2,5,9 ல் அமர்ந்திருக்க கலாநிதி யோகம் உண்டாகிறது.
பலன்
அரசாளும் யோகம் பெறுகிறார்கள்செல்வம் செல்வாக்கு அமைகிறது.

No comments:

Post a Comment