யோகங்கள் - பகுதி 3
யோகங்கள் பகுதி - 2ன் தொடர்ச்சி
யோகங்கள் என்ற வார்த்தை ஒரு கிரகத்திற்கும் இன்னொருகிரகத்திற்கும் தொடர்பை குறிக்கும்.
குறிப்பு: ஜாதகங்களிலே நல்ல யோகங்கள் இருப்பது மட்டும் போதாது. அக்கிரகங்களின் தசைகள் வயது காலத்தில் வந்தால்தான் யோகங்களுக்கும் பலன் உண்டு மற்றும் யோகக்கிரகங்கள் துர்ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல இடங்களில் அமர வேண்டும். அசுபக்கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ உண்டானால் யோகபங்கமாகும்.
67) அந்திய வயது யோகம்
1,2 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், லக்னத்தில் அமர்ந்தாலும்,அந்திய வயது யோகம் உண்டாகிறது.
பலன்
இளமையில் துன்பம் அனுபவிக்கின்றனர். பிற்காலத்தில் கௌரவமான பதவி பெருமை புகழ் யாவும் உண்டாகிறது.
68) திரிலோசனா யோகம்
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோணம் பெறின் (4,7,10,1,5,9) திரிலோசனா யோகம் உண்டாகிறது.
பலன்
எதிரிகளை அஞ்ச வைக்கும் வல்லமை, நிறைய செல்வம், நீண்ட ஆயுள் உண்டாகிறது.
69) பர்வத யோகம்
லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி. உச்சம் பெறின் அல்லது லக்னத்திற்கு கேந்திரம் 4,7,10 பெற்றாலும் இந்த யோகம் உண்டாகிறது.
பலன்
புகழ் பெருமை உலகம் போற்றும் உன்னதமான நிலை உண்டாகிறது.
70) அரச யோகம்
சந்திரன் லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி. உச்சம் பெற்று அந்த சந்திரனை சுக்ரன், குரு பார்வை பெற அரச யோகம் உண்டாகிறது.
பலன்
நாட்டை ஆளக் கூடிய யோகம் உண்டாகும்.
71) பிரம்மா யோகம்
குரு, சுக்ரன் கேந்திரத்தில் அமைந்து புதன் லக்னதிலோ அல்லது 1௦ ல் அமர வேண்டும். இந்த அமைப்பு ஏற்படின் பிரம்மா யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல கல்வி, நீண்ட ஆயுள், பலரும் மதிக்கப்படும் புகழ்,பெருமையாவும் அடையப் பெறுகிறார்கள்.
72) வசீகர யோகம்
புதன், சுக்ரன், சனி மூவரும் கூடி நின்றால் வசீகர யோம் உண்டாகிறது
பலன்
ஜாதகர் அழகு மிக்கவர். மற்றவர்களை எளிதில் கவரும் முக வசீகரம் உடையவர்.
73) காம யோகம்
7 ல் சுப கிரகம் (சுக்ரன் + சந்திரன்) இருபதும் 7 ல் சுபர் பார்வை எற்பதுவதும் காம யோகம் ஆகும்.
பலன்
நல்ல மனைவி நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.
74) கௌரி யோகம்
லக்னத்திற்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் உச்ச கிரகம் லக்னாதிபதியுடன் சேர்ந்திருக்க கௌரி யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல குணம், செல்வச் செழிப்பு, பெருமையாவும் அமையப் பெறுவர். 26வயதுக்கு மேல் இந்த யோகம் பலன் தரும்.
75) மாருத யோகம்
3,6,11 ஆகிய ஏதேனும் ஓர் இல்லத்தில் ராகு இருந்து சுபர் பார்வை பெறின் மாருத யோகம் உண்டாகிறது.
பலன்
அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை அமைகிறது. சகல பாக்கியங்களையும் அனுபவிப்பர்.
76) சுமந்திர யோகம்
லக்னத்தில் கேது அமர்ந்து 7 ல் சந்திரன் இருக்க சந்திரனுக்கு 8 ல் சூரியன் இருக்க சுமத்திர யோகம் உண்டாகிறது.
பலன்
கிராமத்திற்கோ அல்லது சிறு பகுதிக்கோ அதிகரியாக அமையும் யோகம் உண்டாகிறது.
77) அசுபர யோகம்
லக்னத்தில் குருவும், சந்திரனும் சேர்ந்து இருந்து, லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க அசுபர யோகம் உண்டாகிறது.
பலன்
40 வயதுக்கு பின் இந்த யோகம் ஏற்படுகிறது, அரசியலில் ஈடுபாடும்,உயர்ந்த பதவி, பெரும் பாக்கியமும் உண்டாகிறது.
78) யௌவன யோகம்
லக்னத்திற்கு 2 ல் சுப கிரகம் இருந்து 2 க்கு உரிய கிரகம் பலம் பெற்று இருக்க யௌவன யோகம் உண்டாகிறது.
பலன்
கல்வி அறிவு மிக்கவர், யோக சுகம் பெற்று மகிழ்வார்.
79) சாமர யோகம்
குரு 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும். லக்னம் சர லக்னமாக இருக்க வேண்டும். லக்னாதிபதி 3,9,6,12 ல் இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பு இருந்தால் சாமர யோகம் உண்டாகும்.
பலன்
நீண்ட ஆயுள், பொன் பொருள் சேர்கை, அரசியல் செல்வாக்கு ஆகியன அமையும்.
80) நாக யோகம்
9ல் குருவும் 9க்கு உரியவர் 7லும் இருக்க சந்திரன் சுபர் சம்பந்தம் பெற நாக யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல கல்வி உள்ளவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர், சகல வசதி மிக்கவர்.
81) சுலபமாக சம்பாதிக்கும் யோகம்
லக்னாதிபதியும், தனாதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருப்பின் சுலபமாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகிறது.
பலன்
அதிக முயற்சியோ உழைப்போ இன்றி சுலபமாக நிறைய பொருள் ஈட்ட முடியும்.
82) கபட யோகம்
4 ஆம் அதிபதி பாபருடன் கூடினாலும் 4ல் 4ஆம் அதிபதி ஆட்சி பெற்று பாபருடன் கூடினாலும் இந்த யோகம் உண்டாகிறது.
பலன்
கபடம் செய்பவர் ஆவார்.
83) லட்சுமி யோகம்
சுக்ரன் 2, 11 ல் இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது.
பலன்
செல்வந்தராய் வாழ்வர், சுக்ர தசையில் தான் இப்பலன் உண்டாகும்.
84) வெளி நாடு செல்லும் யோகம்
9,12 அதிபதிகள் கடகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் இடம் பெறினும்9,12 அதிபதிகள் பலம் பெற்று இருபினும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.
பலன்
9, 12 ஆகிய திசைகளில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.
85) குபேர யோகம்
2க்கு உரியவர் 9ல் இருப்பினும், 2ல் 9,11 க்கு உரியவர் இருபினும் குபேர யோகம் உண்டாகிறது.
பலன்
கோடி, கோடியாக சம்பதிப்பர்
86) ஸ்ரீ கட யோகம்
அணைத்து கிரகங்களும் 1,5,9 ல் இருப்பது ஸ்ரீ கட யோகமாகும்.
பலன்
சண்டை பிரியர். அரசாங்கத்தில் பனி அமையும். நல்ல மனைவியும் மகிழ்ச்சியான வாழ்கையும் அமையும்.
87) விஷ கன்னிகா யோகம்
பெண் சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் பிறந்து ஆயில்யம்,சதயம், கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பின் விஷ கன்னிகா யோகம் உடையவள் ஆவாள்.
பலன்
இத்தகைய பெண்ணுடன் உடலுறவு கொண்டால் ஆணின் உடல் நலம் பாதிக்கபடும். பெண்ணின் ஜாதகத்தில் 2, 8 பாதிக்கப்பட்டு இருக்குமானால் கணவன் உயிர் நீங்கும் நிலை பெறுவர்.
88) அமாவாசை யோகம்
சூரியனும், சந்திரனும் இனைந்து இருபது அமாவாசை யோகமாகும்.
சூரியனும், சந்திரனும் இனைந்து இருபது அமாவாசை யோகமாகும்.
பலன்
அன்றாட வாழ்கை மிகவும் துன்பம் நிறைந்ததாக இருக்கும். இதில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெறின் சமுதாயத்தில் தலைவராகவோ, நாட்டின் தலைவராகவோ, அரசாலும் யோகமோ அமையப் பெறுகின்றார்கள்.
89) ரோககிரகஸ்தா யோகம்
லக்னாதிபதி பலம் இழந்து 6, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தாலும் 6, 8, 12 க்குகுரியவர் லக்னத்தில் அமர்ந்திருந்தாலும் ரோககிரகஸ்தா யோகமாகும்.
பலன்
மெலிந்த தேகம் உடையவர்,
90) அரச கேந்திர யோகம்
லக்னத்திற்கு 1,4,7,1௦ ஆகிய இடங்களில் உள்ள கிரகங்கள் யாவும் உச்சம் பெற்று காணப்படின் அரச கேந்திர யோகமாகும்.
பலன்
மக்கள் சக்தியின் மகத்தான ஆதரவை பெரும் யோகம் உண்டாகும்.
91) வீனா யோகம்
7 கிரகங்கள் 7 ராசிகளில் இருபது வீனா யோகம் ஆகும்.
பலன்
வாழ்கையில் வசதி வாய்ப்பு அடைகிறார்கள். சமுதாயத்தில் தலைவராக இருப்பார்கள. அறிவாற்றல் மிக்கவராக இருப்பர்.
92) கேதரா யோகம்
7 கிரகங்கள் 4 ராசிகளில் இருப்பது கேதரா யோகம் ஆகும்.
பலன்
சிறந்த விவசாயிகளாகவும் அனைவர்க்கும் உதவி செய்யும் மனமுடயவராகவும் உள்ளனர்.
93) சதுஸ்ர யோகம்
1,4,7,1௦ ஆகிய இடங்களில் கிரகங்கள் இருந்தால் சதுஸ்ர யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல இல்வாழ்வு
புத்திர பாக்கியம்
அபரிமிதமான செல்வ சேர்க்கை உண்டாகிறது.
94) ராஜயோகம்
1,4,7,1௦ ஆகிய வீட்டுக்கு அதிபதிகள் கேந்திரபதிகள் எனபடுவர். இவர்கள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்று இருப்பின் ராஜயோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல மனைவி, வீடு யோகம், தொழில் யோகம், செல்வம், செல்வாக்கு உண்டாகிறது.
95) சாங்கியா யோகம்
லக்னம், 9 ஆம் இடம் ஆகிய ஸ்தானங்களில் ரக்து, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் இருப்பின் சாங்கியா யோகம் உண்டாகிறது.
பலன்
உயர்ந்த குணம் உள்ளவர். சாந்தமானவர். சகல பாக்கியங்களும் பெற்று வசதியாக வாழ்வார்.
96) உபஜய யோகம்
உபஜய ஸ்தனங்களான 3,6,10,11 ஆகிய இடங்களில் குரு, சுக்ரன், புதன்,சந்திரன் ஆகிய சுப கிரகங்கள் இருக்குமாயின் உபஜனயோகமாகும்.
பலன்
வசதி நிறைந்து வாழ்வார். எடுக்கும் காரியங்களில் வெற்றியும் பெறுவார்.
97) பாக்கிய யோகம்
லக்னத்திற்கு 1௦ல் சுப கிரக்கம் இருப்பது அல்லது 1௦குடைய பாக்கியாதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று சுபகிரக பார்வை பெறுவது பாக்கிய யோகமாகும்.
பலன்
அழகு, அறிவு, தயாளகுணம் உடையவர். வாகன சுகம் உடையவர்.
98) அங்கஹீன யோகம்
12 ஆம் அதிபதி கேந்திர திரிகோணம் பெற்று ராகுவுடன் சம்பந்தம் பெறுவது.
பலன்
உடலில் ஏதாவது ஓர் உறுப்பில் குறை இருக்கும்.
99) லக்ன கர்மாதிபதி யோகம்
லக்னதிபதியும் 1௦ ஆம் அதிபதியும் சம்பந்தம் பெறுவது (பார்வை அல்லது சேர்கை)
பலன்
தனது முயற்சியால் உயர்நிலை அடைவார்.
No comments:
Post a Comment