Sunday, December 14, 2014

எண் கணித பலன்கள் (Numerology)

எண் கணித பலன்கள் (Numerology)

எண் கணித பலன்கள் அறியும் முன்...

எண்சோதிடம் என்பது எண்களுக்கும் வாழ்வின் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் வருங்காலத்தைக் கணிக்கும் சோதிடம் ஆகும். எடுத்துக்காட்டாக ஒருவருடைய பிறந்த தேதி, வீட்டின் இலக்கம், பெயர் எழுத்துக்களின் கூட்டுத்தொகை போன்ற எண்களுக்கும் அவருக்கு நிகழக்கூடிய இன்ப துன்பங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஒருவருக்கு அவர் பெயரை மாற்றி அவருக்கு சாதகமான எண் உடைய பெயர் வைத்தால் அவருக்கு நன்மைகள் விளையும் என்றும் நம்படுகிறது.




ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம்.

ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட எண்கள் என்று எப்படி தேர்வு செய்யப்படுகிறது? ஒவ்வொருவர் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகையைக் கொண்டு அதற்கான எண்கள் கண்டறியப்படுகிறது. உதாரணமாக, கமலம் பிறந்த நாள் 21-03-1999 என்று வைத்துக் கொள்வோம்.

கமலத்தின் பிறந்த நாள் 21 என்பதால் இவரின் பிறந்தநாளின் கூட்டுத்தொகை 3. பிறந்த நாள் வழியிலான எண் - 3

பிறந்த தேதி வழியிலான எண் - 2+1+0+3+1+9+9+9 = 34 = 3+4 = 7

ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள்
A, I, J, Q, Y - 1
B, K, R,       - 2
C, G, L, S    - 3
D, M, T       - 4
E, H, N, X   - 5
U, V, W       - 6
O, Z            - 7
F,P              - 8

உதாரணமாக - KAMALAM

கமலம் ஆங்கில எழுத்துக்களின்படி KAMALAM பெயரின் கூட்டு எண் - 7
2+1+4+1+3+1+4 = 16 = 1+6 = 7
ஆங்கிலப் பெயர் வழியிலான எண் - 7


ஒருவரின் பெயர் RAMU -13 என்று வந்துக் கொள்வோம். அதே எழுத்துக்கள் தான் அடையால அட்டையில் இருக்குமெயானால் மேலும் அவருக்கு அந்த பெயர் பல சிக்கல்களை தந்தால்.. அவர் தன் பெயரைக் குறிக்கும் போது RAAMU-14 என்று குறிக்க வேண்டும். இதனால், அவர் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் நிகழும். அதே போலே தான் SELVAM-22 என்ற பெயரும். அதை மாற்றி குறிக்கும் போது SELVAAM-23 என்று மாற்றிக் கொள்ளுங்கள். மேலும், மாற்றிய பெயர் 5 எண்ணாக வரவேண்டும் என்பதற்கில்லை. இது வெறும் எடுத்துக்காட்டு தான், ஆகையால், உங்களில் அதிர்ஷ்ட எண்ணுக்கு உங்கள் குறிக்கும் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்.

பெயர் கூட்டு எண்ணின் பலன்கள்  
அறிய இங்கே சொடுக்கவும் ( 1 முதல் 117 வரை)

அதிர்ஷ்ட நிறம் / கல் / நிறம்
ஆங்கில தேதி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, வெளிர்சிவப்பு, மஞ்சள், பொன்னிறம்
அதிர்ஷ்டக் கல் - தங்கம், மாணிக்கம்
துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு, பாக்கு கலர்

ஆங்கில தேதி 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட நிறம் - வெளிர் மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்டக் கல் - முத்து
துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம்

ஆங்கில தேதி 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு, ரோஸ், தாமரைப்பூ நிறம்
அதிர்ஷ்டக் கல் - செவ்வந்திக்கல், புஷ்பராகம்
துரதிர்ஷ்ட நிறம் - கருநீலம், கருப்பு ஆழ்ந்த பச்சை

ஆங்கில தேதி 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட நிறம் - வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்டக் கல் - கோமேதகம்
துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு

ஆங்கில தேதி 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட நிறம் - சாம்பல்
அதிர்ஷ்டக் கல் - வைரம்
துரதிர்ஷ்ட நிறம் - பச்சை, கருப்பு

ஆங்கில தேதி 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை, மஞ்சள், ரோஸ்
அதிர்ஷ்டக் கல் - மரகதம்
துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு, பாக்கு கலர்

ஆங்கில தேதி 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அதிர்ஷ்ட நிறம் - இலேசான மஞ்சள், வெளிர்பச்சை, நீலம், வெள்ளை
அதிர்ஷ்டக் கல் - வைடூரியம்
துரதிர்ஷ்ட நிறம் - கருப்பு, சிகப்பு

1 comment:

  1. If you're attempting to lose weight then you certainly have to get on this totally brand new custom keto plan.

    To create this keto diet service, licensed nutritionists, fitness trainers, and cooks joined together to provide keto meal plans that are effective, painless, cost-efficient, and satisfying.

    From their launch in January 2019, thousands of clients have already remodeled their body and well-being with the benefits a great keto plan can give.

    Speaking of benefits: in this link, you'll discover 8 scientifically-confirmed ones provided by the keto plan.

    ReplyDelete